பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

  • r =

தோன்றி மறைவதுபோலப் புலப்படுகிறது. பச்சைப் பசுங்கடலில் சிறு சிறு தீவுகள் நிலவுவதைமான, கூரை வேய்ந்த சிறு சிறு குடில்கள் நிலவுகின்றன. அக் குடில்களின் நடுவண் ஆடவர் மகளிர் குழந்தை கள், காளை மயில் கன்றுகளென நிற்கின்றனர். அவ் வீட்டமும், இக்கூட்டமும் இயற்கையோடியைந்த இன்பமாகப் பொலிகின்றன. ஆங்காங்கே, சிற் சில இடங்களில் இக்கால நாகரிகக் கட்டடங்களும் புலன. கின்றன. அவைகளைக் காணுந்தோறும் பொல்லா அரக்கர் குழுவைப் பார்ப்பதுபோன்ற நிகழ்ச்சி உள்ளத் துரு.மற்போகாது. கூரை வேய்ந்த வீடுகள் இயற்கை யோடியைந்து இன் பூட்டுவதுபோலப் பெரும் பெரும் மாடிகள் இயற்கையோடியைக் திருப்பினும் இன் பூட்டுவதில்லை.” (இத் தமிழ்ப்பெரியாரின் வருணனைக் கட்டுரையை நினைவிற்கொண்டு, கீ ழ் க் கா னும் பொருள்களில் வருணனைக் கட்டுரைகள் வரைந்து பழகுக.) (1) கடற்கரைக்காட்சி (2) ம8லவளக் காட்சி (3) இயற்கைக் காட்சி (4) மாமல்லபுரச் சிற்பக் காட்சி (5) மலேக்கோட்டை (திருச்சிராப்பள்ளி) (6) செஞ்சிக் கோட்டை (இற்றைய கிலே) (7) காவிரிப் பூம்பட்டினம் (பூம்புகார்) (8) மதுரை மீட்ைசியம்மன் கோயில். (9) நீ சென்ற கடற் செலவு (10) நீ கண்ட நாடகக் காட்சி (11) கீ பார்த்த ஒரு பயிர்த் தொழில் (12) தேன் சேகரிக்கப்படும் முறை (13) முழுநிலவுக் காட்சி (14) நீ கண்ட கொலுக்காட்சி (15) மேட்டுர் அனே. 3. விளக்கக் கட்டுரைகள் இவை,படிப்பார்க்குப் பொருள் விளங்க,விளக்கமாக வரையப்படுவதால் விளக்கக்கட்டுரைகள் எனப்படும்.