பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 ரும் சமயப் பொதுமையும் (10) தாயுமானவர் வேண்டும் சமய வாழ்க்கை (11) ஆங்கிலச் சமுதாயத் திற்கும் இந்தியச் சமுதாயத்திற்கும் உள்ள வேறுபாடு கள் (12) பொருளாதார நிலையும் மக்கள் வாழ்வும் (13) மாணவர் நிலை (14) மெய்கண்டார் வகுத்த வழிகள் (15) சமயப் பெரியார்களும் சமுதாய வாழ்வும். (ஆ) நடைமுறைப் பொருளியல் கட்டுரைகள் பொருளற்றவரைப் பொருளாகச்செய்யும் பொருள் சமுதாயத்தில் முதலிடம் பெறுகிறது. அப்பொருள் வரும் வழிகளையும், பெருக்கும் முறைகளையும், சேர்த்து வைக்கும் முறைகளையும், செலவிடும் முறைகளையும் அறிந்து பொருளாதாரத் தொடர்பான காணயமாற்று, வங்கிகள், பயிர்த் தொழில், வாணிகம், கைத்தொழில், கூட்டுறவுச் சங்கம் போன்றவற்றைப்பற்றி எழுதுவது பொருளியல் கட்டுரைகளாகும். சுருங்கக்கூறின் பொரு ளாதாரத் தலைப்புக்கள் குறித்து எழுதுதல் இதன் பாற்படும். பின் வரும் பொருள்கள் குறித்துக் கட்டுரைகள் வரைந்து பயிலுக. (1) வங்கிகள் (2) போக்கு வரவுச் சாதனங்களின் வரவு செலவுகள் (3) நாணயமாற்று (4) கூட்டுறவுச் சங்கம் (5) பயிர்த் தொழில் வளர்ச்சி (6) பொருளா தாரம் (7) உழவர் கடன் தொல்லே (8) உள்நாட்டு வாணிகம் (9) இந்திய மக்கள் வருமானம் (10) குடி சைத் தொழில் வளர்ச்சி (11) வெளிநாட்டு வாணிகம் (12) பெரிய கைத்தொழில் வளர்ச்சி (13) பொருள் நூல் (14) வரவு செலவு (15) திட்டமிட்ட வாழ்வு.