பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167 (இ) நடைமுறைக் கல்வியியல் கட்டுரைகள் கேடில் விழுச் செல்வமாகிய கல்வி மனித இனத் தின் பிறப்புரிமையாக அமைந்துவிட்டது. அக் கல்வி: கிராமக் கல்வி, முதியோர் கல்வி, தொழிற் கல்வி, பொதுக் கல்வி, சமயக் கல்வி, ஒழுக்கக் கல்வி எனப் பலதிறத்தனவாம். இவ்வாறு நடைமுறையில் அமைக் துள்ள கல்வியைப்பற்றி எழுதுதல் இத்தலைப்பின் கீழ் அட்ங்கும். தொட்ரும் பத்தியிலுள்ள பொருள்கள் குறித்துக் கட்டுரைகள் எழுதிப் பழகுக. (1) முதியோர் கல்வி (2) சிறுவர் கல்வி (3) உயர் நி2லக் கல்வி (4) கல்லூரிக் கல்வி (5) தொழிற் கல்வி (6) கிராமக் கல்வி (7) தொடக்க நிலைக் கல்வி (8) இன்றையக் கல்வி முறை (9) அறிவியற் கல்வி (10) கல்வித்திட்டத்தில் வேண்டப்படுவன (11)தொழில் மூலம் கல்வி (12) கல்வியும் கல்விக் கழகங்களும் (13) ஒழுக்கக் கல்வி (14) வானெலியும் கல்வியும் (15) திரைப் படமும் கல்வியும் (16) நாடகமும் கல்வி யும் (17) பொருட்காட்சியும் கல்வியும். 8. பிறர் சொற்பொழிவுகளைக் கேட்டுக் குறிப்பெடுத்தல் சொற்பொழிவைக் கேட்கின்ற பொழுது மிகக் கவனமாய் இருத்தல் வேண்டும். கேள்விப்புலமும், மனமும் ஒருமையாய் இயங்குதல் வேண்டும். சொற் பொழிவைக் கேட்டுக் குறிப்பெடுத்துப் பழகப் பல அறிஞர்களுடைய சொற்பொழிவுகளைக் கேட்க வேண் டும். குறிப்புக்களைக்கொண்டே கட்டுரை வரையலாம்.