பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 கீழ்க்கண்ட அலுவலகங்களுக்குப் பின் கண்ட விண் ணப்பங்களை எழுதிப் பழகுக. 1. தெருவிளக்கு எரியவில்லை யென்று மின் விசைக் கழகத் துணைப் பொறியாளருக்கு விண்ணப்ப மொன்று வரைக. 2. அரசாங்கக் கல்லூரி முதல் வருக்குப் புகுமுக வகுப்பில் சேர, விண்ணப்பத்தாள் அனுப்புமாறு: வேண்டி எழுதுக. 3. கல்வி அமைச்சரைப் பள்ளி இலக்கியக் கழக விழாவிற்குத் தலைமை தாங்குமாறு வேண்டி எழுதுக. 4. வருமான வரி அலுவலகத்தில் வேலை வேண்டித் தலைமை அலுவலருக்கு விண்ணப்பம் ஒன்று எழுதுக. 5. அரசு வங்கியில் வேலை வேண்டி வங்கி இயக்கு கருக்கு விண்ணப்பம் வரைக. - 6. GRGuટ) தேடித் தரும் அலுவலகத்திற்கு உன் தகுதி, கிலே குறிப்பிட்டு வேலை வேண்டி விண்ணப்பம் எழுதுக. 7. பொதுப் பணித் துறைத் தலைமைப் பொறியாள ருக்கு, மேற்பார்வையாளர் வேலை வேண்டி விண்ணப் பம் வரைக. (ஆ) ஊராட்சி, நகராட்சிக் கழகங்களுக்கு எழுதுதல் தன்னுடைய ஊருக்கு, ககரத்திற்குத் தேவையான நீர், விளக்கு, சாலை, துப்பரவு முதலியன வேண்டி, ஊராட்சி, ககராட்சிக் கழகங்களுக்கு விண்ணப்பம் எழுதிப் பழகுதல் வேண்டும். கீழ்க் கண்ட் விண்ணப் பங்களை எழுதிப் பயிற்சி பெறுக.