பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179 தொன்றைப் படைத்துக் காட்டுவது மற்றெருவகை. அறிவியல் கண்டுபிடிப்புக்களெல்லாம் ஒருவகைக் கற்பனையால் விளைந்த பயன்களேயாம். எண்ண வோட் டம் தங்கு தடையின்றி எல்லையிறக் து போவதுதான் கற்பனையின் உச்சநிலையாகும். மாணவர்கள் தங்கள் எண்ணங்களை ஒருவழிச் செலுத்தி உரிய பொருள் குறித்தோ, கிலே குறித்தோ எழுதிப் பழகல் வேண்டும். கற்பனைக் கட்டுரைக்குக் காட்டாக அறிஞர் மு. வ. வின் கி. பி. இரண்டாயிரம் என்ற நூலேப் பயின்று பார்க்க. கற்பனையாற்றலை மாணவப் பருவத்திலேயே வளர்த்துக்கொளல் கலம். ஈண்டு நிலவுக் காட்சி’ குறித்து எழுதிய கற்பனைக் கட்டுரையின் ஒரு பகுதி இடம் பெற்றுள்ளது. இதனைக் காட்டாகக் கொண்டு பல கற்பனைக் கட்டுரைகள் எழுதிப் பழகுக. நிலவுக் காட்சி (கற்பனைக் கட்டுரை) வானத்து விளக்கு : அக்தி மயங்கி இருள் சூழும் கேரம் . என் தாய், வீட்டில் விளக்கேற்றி வைக்கின்றள். அப்பொழுது உலகத்தை இருள் விழுங்காவண்ணம், இயற்கைத் தாய் ஒர் ஒளி விளக்கை வானத்திலே ஏற்றி வைக் கின்ருள். வீட்டில் விளக்கேற்றியவுடன் குழந்தைகள் மகிழ்ந்து விளையாடுவதைப்போல், வானத்து விளக் கைக் கண்டவுடன் உலக மக்கள் மகிழ்ந்து களிக்கின் றனர். அந்த விளக்கு ஏழை என்றும் செல்வரென்றும், உயர்ந்தவரென்றும் தாழ்ந்தவரென்றும் வேறுபாடு கருதாது ஒரு நிகராக ஒளியைத் தருகின்றது. முழு நிலாக் காலங்களில் வானகமும் வையகமும் ஒரே ஒளி