பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181 கொள்வதோடமையாது, அத் தீர்மானங்களை நிறைவேற் றித் தலைவர், செயலர் கையொப்பமிட்டு, உரிய அலு வலகங்களுக்கு அனுப்பப் பழகிக் கொள்ள வேண்டும். அத்தீர்மானங்களைச்செயற்படுத்தஅவற்றுடன்வேண்டு கோட் கடிதமொன்று வைக்கப்பெறல் வேண்டும். தீர் மானங்களைப் பல படிகள் எடுத்து அனுப்புதல் வேண் டும். தீர்மானம் பொதுவிடம் அல்லது மன்றம் பற்றிய தாக யிருக்குமானல், அதனை நாளிதழ்களுக்கு அனுப்பி வெளியிடச் செய்தல் வேண்டும். தீர்மானங்களைப் படி எடுத்து அனுப்புகின்றபொழுது, தூய்மையாகத் தெளி வாகத் தட்டெழுத்துப் பொறியின் மூலம் படிஎடுத்தோ, அல்லது நல்ல முறையில் எழுதியோ அனுப்புதல் வேண்டும். தீர்மானங்களே நிறைவேற்றுவதால் மட்டும் பய னில்லை. உரிய அலுவலகங்களுக்கு அனுப்பி வைப் பதன் மூலம்தான் அவை பயனளிக்கும். 17. ஒருபொருள் அல்லது சூழ்நிலை பற்றி ஒட்டியும் வெட்டியும் உரையாடல் அேமைத்தல். உரையாடற் கலை, வளர்க்கப் பெற வேண்டிய கலை யாகும். மாணவர்கள் இருபாலும் எண்ணத்தக்க பொருள் குறித்துச் சொற்போர் நிகழ்த்தப் பழகியிருப் பார்கள். காட்டாக : சிறந்த வாழ்க்கை அமைவது சிற் றுாரிலா? நகரத்திலா?’ என்ற பொருள் குறித்து ஒட்டியும் வெட்டியும் உரை நிகழ்த் துகின்றபொழுது, மாணவர்கள் தாங்கள் சேர்ந்த கட்சிக்கு வெற்றி வேண்டிப் பல ஆதாரங்களையும், கருத்துக்களையும்