பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 கம்பி, திரைப்படத்தால் விளைவது கன்மையே என்று சொற்போரைத் தொடங்கி வைப்பாராக. அறிவுடைநம்பி: ஒரு பாற்கோடா உயர் பெருக் தகையாகிய நடுவர் அவர்களே! அறிவு கல்கும் ஆன் ருேரே! மாற்றுக் கட்சி கண்பர்களே! அன்புத் தோழர் களே! அனைவரையும் த2லதாழ்த்தி வணங்குகிறேன். சின்னட்களுக்கு முன்னர் நம் பள்ளியில் காட்டப் பெற்ற படக்காட்சியைக் காண நாம் அனைவரும் கூடி யிருந்தோம். தீமையெனப் பேச முன்வந்துள்ள கண்பர் களும் அன்று முன் வரிசையில் அமர்ந்து கண்டு களித் தமையும் குறிப்பிடத்தக்கது. (கைதட்டல்). திரைப் படக் காட்சிகளைக் கண்ணுரக் கண்டும், உரையாடல் களையும், பாடல்களையும் செவியாரக் கேட்டும் சிந்தை களிகூரும் நிலையை அடைகின்ருேம். ஆகவே, கட்புல னுக்கும் செவிப்புலனுக்கும் ஒருசேர இன்பம் உண் டாக்குகிறது திரைப்படம் என்பதை உணர்கின்ருேம். பள்ளிகளில் படக் காட்சியும் ஒரு பாடப் பகுதியாகச் சேர்க்கப்பட்டிருப்பதிலிருந்தே, அதனல் விளையும் கன்மைகளைத் தெற்றென உணர்கின்ருேம் கற் றவர்மட் டுமே புத்தகங்களைப் படித்துணர முடியும்; சிலர் மட் டுமே சொற்பொழிவைக் கேட்டு மகிழ முடியும்; இசை யும் அவ்வாறே. ஆனல், திரைப்படத்தைக் கற்றரும் மற்றரும் ஆயிரக்கணக்கானவராகக் கூடியிருந்து ஒரே நேரத்திற் கண்டுகளிக்க வாய்ப்புண்டு முத்தகம் ஒருவரால் எழுதப்படுவது; சொற்பொழிவு' ஒருவரால் நிகழ்த்தப்பெறுவது; இசை ஒருவரால் இசைக் கப் பெறுவது; திரைப்படக் கலையோ பலருடைய அறி வால், கூட்டுறவால் உருவாவது. ஆதலின் பலருடைய அறிவாற்றலையும் ஒருங்கே பெற்று மகிழத் திரை யரங்கு துணைபுரிகிறது; பொழுதை நன்முறையிற்: