பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185 படத்தாலன்றே நண்பர் கண்ணுடி போட்டிருக்கிறர் என்பதற்காகக் கூறவில்லை. (கைதட்டல்). உண்மை நிலையை விளக்கினேன். காலம் பொன்போன்றது என்பர். அப்பொன்னை காலத்தை, ஆயிரக்கணக் கான மக்கள், காடோறும் பாழ்படுத்தி வருகின்றனர். மேலும், காசுங் கரியாகிறது. ஒருவரையொருவர் அடித்துக்கொண்டும், இடித்துக்கொண்டும், முட்டிக் கொண்டும், தள்ளிக்கொண்டும் சீட்டு வாங்க முனை கின்றபொழுது, எத் துணை இழப்புக்கள் நேரிடக்காண் கின்ருேம். வரிசையில் நின்று ஒழுங்குறச் செல்லும் பண்பைக் குலத்துவிடுகிறது. 'பொது மக்கள் புத்தகம்’ என்று அவர் குறிப்பிட்டார். அது பொது மக்கள் பண்பாட்டைக் குலைக்கும் புதுக் கருவி என்றே கான் கூறுவேன். புத்தகத்தைக் கற்பதால், சொற் பொழிவைச் சுவைப்பதால், இசையைக் கேட்பதால் கெட்டார்கள் என இதுவரை கேள்விப்பட்டதேயில்லை. ஆனல், திரைப்படத்தால் தீமை பெருகிப் பரந்து விரிந்து வருவதை நம் மாணவர்களுடைய தோற்றமும் ஒப்பனையுமே தெள்ளத் தெரிய விளக்கி கிற்கின்றன) தலையலங்கோலம், ஆடைக் குறைப்பு இவற்றில் நம் மாணவர்தம் மாண்பு எங்கே? (கைதட்டல்). நகைச் சுவைக்காக கான் இதைக் கூறவில்லை; நாட்டின் போக்கைக் கண்டு, மனம் கைந்து கூறுகிறேன். எனவே, திரைப்படத்தால் சமுதாயமே சீரிழந்து வருகிறது என்பதைத் தாழ்மையுடன் வற்புறுத்திக் கூறி முடிக்கின்றேன்; வணக்கம். இங்ங்னம், எடுத்துக்கொண்ட பொருளைப் பற்றி ஒட்டியும் வெட்டியும், உரையாடல்களைப் பேசியோ எழுதியோ பழகிக்கொள்வது நன்று.