பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 மேற்பல் லிதழுற மேவிடும் வவ்வே. (ந-நூற்பா 85.)" (ற, ன இவற்றின் முயற்சிப் பிறப்பு) நாற்று தென்னை இச் சொற்களில் உள்ள ற், ன் என்ற இரண்டு மெய்யெழுத்துக்களையும் ஒலித்துப் பாருங்கள். அவை, மேல்வாயை காக்கு நுனி கன்கு பொருந்தும் முயற்சியால் பிறத்தல் தெரிய வரும். இலக்கண விதி : மேல்வாயை காக்கு நுனி கன்கு பொருந்தும் முயற்சியால், ற், ன் என்ற இரண்டு மெய்யெழுத்துக்களும் பிறக்கும். அண்ண நுனிநா நளிையுறிற் றனவரும். (ந-நூற்பா 86.). 5. சார்பெழுத்துக்களின் இட முயற்சிப் பிறப்பு அஃது இஃது இச் சொற்களில் உள்ள ஆய்த எழுத்தை ஒலித்துப் பாருங்கள். ஃ என்ற ஆய்த எழுத்தை ஒலிக்கும் பொழுது, உதானன் என்ற காற்று தலைக்குச் சென்று வாய் வழியாக வெளி வருகின் றது. எனவே, ஆய்த எழுத்திற்குப் பிறப்பிடம் தலையும், முயற்சி, வாய் திறத்தல் மட்டுமே என்ப தும் தெரியவரும். திருக்குறள் திருவள்ளுவர் இச் சொற்களில் உள்ள தி என்ற வல்லின உயிர்மெய்யெழுத்தை ஒலித்துப் பாருங்கள்.