பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 கைவினையாற்றும் கரம் கூப்ப, உழைப்போரை வணங் கும் தலை தாழ வணக்கம் கூறி வருக! வருக! என வர வேற்கின்ருேம். இளமையும் புலமையும் இயைந்த ஏந்தலே! மதிநுட்பமும் நூல் நுட்பமும் இணைந்த அறிவும், இளமையும் புலமையும், ஒன்னர் அஞ்சும் உடலும், ஒருங்கே பெற்ற உருவும், ஆராய்ந்து, தெளிக் து. தேர்ந்த கல்வி வன்மையும் உடைய சாமியே! வள்ளுவப் பேராழியில் முழ்கி வளஞ்சுரக்கும் கருத்து முத்துக்களைக் காசினிக்குக் காட்டுவிக்கும் தென்ன கத்தின் தமிழ் முத்தே! எம்மவரின் சொத்தே! தூங்காமை துணைக்கொண்டு துணிவோடு தொண் டாற்றும் தொண்டரே! நும் வருகை கண்டு தளிர்க்கும் தமிழ் கெஞ்சங்கள் வருக! வருக! என வரவேற் கின்றன. அறிஞருள் அறிஞர்வழி நின்றெழுகும் அண்ணலே! கழகத்தின் கடன் களைக் காலக் தவற து கட்டிக் காத்து, மக்கள் தொண்டே மனிதத் தொண்டென த் தொண்டுக் கொடியேந்தித் துன்புறுவோர் துயர் துடைக் கவர் த துளயோய்! பார்புரக்கும் மாரியென, பைக் தமிழ் காடு புரக்கும் தமிழேர் உழவர் பண்பாட் டின் திருவுருவே பகுத்தறிவின் ஒளிவிளக்காம் அறிஞ ருள் அறிஞர் அடிச்சு வட்டில் நின்றெழுகும் அருமை இளவலே! எங்கள் அமைச்சே! இவண்போந்து எங்கள் இடத்தை அணிசெய்தமை குறித்து நாங்கள் அகமகிழ் ருேம். தங்கள் இனிய வருகைக்கு மீண்டும் உள மொன்றிய வணக்கம் கூறி வருக வருகவென வர வேற்கின்ருேம்.