பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிப் பயிற்சி 1. வாக்கியம்-பலவகைகள் சொற்கள் தொடர்ந்து கின்று, பொருள் விளக்கக் தருதலைத் தொடர்மொழி என்றும், சொற்றெடர் என் றும், வாக்கியம் என்றும் கூறுவர். அவ்வாக்கிய வகை களைப் பற்றி இங்கே காண்போம். அ. செய்தி வாக்கியம் : ஏதேனும் ஒரு செய்தியை வெளிப்படுத்தும் வாக் கியம் செய்தி வாக்கியம் எனப்படும். எ-டு: "தமிழக முதலமைச்சர், பட்டமளிப்பு விழாப் பேருரையைத் தமிழில் கிகழ்த்தினர்.” இ.. து, ஒரு செய்தியைத் தன்னகத்தே கொண்டு விளங்குவதால், செய்தி வாக்கியம் எனப்படுகிறது. ஆ. வி ைவாக்கியம் : வினப் பொருள்பட வரும் தொடர், விவைாக் கியம் எனப்படுகிறது. /T எ-டு: வழியிற் கிடந்த இப் பொருள் யாருக் குரியது ? இத்தொடர் விணுப் பொருள்பட்டு முடிதலின் விஞ வாக்கியம் எனப்படுகிறது. இ. கட்டளை வாக்கியம்: ஏவல் வினை கொண்டு முடியும் வாக்கியம், கட்டளை வாக்கியம் எனப்படும். எ-டு: சமுதாயத்தில் சிறப்பிடம் பெறக்கருதி ஞல்? முதற்கண் பொருளைத் தேடு.