பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O2 தேடு' என்ற ஏவல் வினையைக் கொண்டிருத் தலின் இது கட்டளை வாக்கியமாயிற்று. ஈ. உணர்ச்சி வாக்கியம் : மெய்ப்பாட்டை வெளிப்படுத்தும்வகையில் கூறப் படும் வாக்கியம் உணர்ச்சி வாக்கியம் எனப்படும். எ-டு: மானும் புலியும் ஒரு துறையில் நீர் அருந்தும் இக் காட்டின் ஆட்சித் திறந்தான் என்னே ! H "வியப்பு என்னும் மெய்ப்பாடு விளங்க உரைக்கப் படுதலின், இஃது உணர்ச்சி வாக்கியமாயிற்று. இனி இவ்வாக்கியங்களே அவற்றின் அமைப்பு முறைகொண்டு கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம். தனிவாக்கியம் : 'புலவன் இயற்கையிலிருந்தே கவிதையைப் பெறுகிறன் .' இங்கு, ஒரெழுவாயும் ஒரு பயனிலையும் வர, வாக் கியம் முற்றுப் பெறுதலின், இது தனி வாக்கியம் எனப்படும். தொடர் வாக்கியம்: "ஆசிரியர் வந்தார்; வினுக்களை விடுத்தார்; பாடத் தைத் தொடங்கினர்.” இவ்வெடுத்துக் காட்டில், ஆசிரியர் என்னும் எழுவாய் வந்தார், விடுத்தார், தொடங்கினர் என்னும் மூன்று பயனிலைகளைக் கொண்டுள்ளது. இத்தொடர் “ஆசிரியர் வந்து, விளுக்களே விடுத்துப் பாடத்தைத் தொடங்கினர்” என்று ஒரே தொடர்க்குரிய பொருளைத் தருதலின் தொடர் வாக்கியம் எனப்படும்.