பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 6. உள்ளத்தை உருக்குகின்ற சிறந்த பாடல்களை யாரும் மறவாரென்பதாக விபுலானந்தர் கூறு கின் ருர், (அயற்கூற்று வாக்கியம்) 7. உள்ளத்தை உருக்குகின்ற சிறந்த பாடல்களை யார்தாம் மறப்பர்? (விஞ வாக்கியம்) 8. உள்ளத்தை உருக்காத, சிறப்பற்ற பாடல்க ளாயின் யாவரும் மறக்கட்டும். (கட்டளை வாக்கியம்) 9. உள்ளத்தை உருக்குகின்ற சிறந்த பாடல்களே யாரும் மறப்பரோ! (உணர்ச்சி வாக்கியம்) 4. பத்தியமைப்பு (விரிவாக) பத்தி என்பது கட்டுரையின் ஒருறுப்பாகும். பத்தி யானது பல தொடர் மொழிகளால் ஆக்கப்பட்டிருப் பினும், ஒரு கருத்து அல்லது குறிப்பை விரித்துரைப்ப தாகவே அமையும். கருத்து அல்லது குறிப்பை உய்த்துணரும் வகையில் கரந்து வையாது வெளிப் படையாகத் தாங்கி கிற்றல் சிறப்புடையதாகும். பத்தி யின் கருத்து அல்லது குறிப்பு, பத்தியி ன் எப்பகுதி யில் வேண்டுமாயினும் கிற்கலாம். எனினும், தொடக் கத்திலேயே கிற்றல் கற்பார்க்கு இனிமையைப் பயககும். ஒன்றுக்கு மேற்பட்ட பல கருத்துக்களை அல்லது குறிப்புக்களே, ஒரே பத்தியில் திணித்து வைத்தல் கட்டுரையின் அழகிற்கும், இனிமைக்கும் ஊறு விளே விக்கும். ஒரு பத்தியை முடித்து, அடுத்த பத்தியைத் தொட்ங்கும்பொழுது, பொருள் கலங்கருதியும் எழில்