பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 குறை குடம் ததும்பும்; நிறை குட்ம் ததும்பாது கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை. கைக்கெட்டியது வாய்க்கெட்ட வில்லை. பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும். பதரு த காரியம் சிதருது. பழகப் பழகப் பாலும் புளிக்கும். பொறுத்தார் பூமி யாள்வார். மின்னுவதெல்லாம் பொன்னல்ல. 11. உவமை உருவக மாற்றம் அறிந்த பொருளைக் கொண்டு அறியாத பொருளை உணர்த்தலே உவமையின் நோக்கம் என்று குறிப்பிட் டோம். இவ்வாறு வரும் உவமைகளே உருவகங்களா கவும் மாற்றிக் கூறலாம். ஆதலின் உவமை, உருவ கம் ஆகிய இரண்டின் இயல்புகளையும், அவற்றை மாற்றும் முறைகளையும் பற்றிக் காண்போம். “தாமரை முகம்” இது தாமரை போன்ற(மலர்ந்த) முகம் என விரியும். இத்தொடர் உவமானம், உவமே யம், உவம உருபு, பொதுத் தன்மை என்ற நான்கு உறுப்புக்களைக் கொண்டுள்ளது. இங்கே, தாமரை: உவமானம்; முகம்: உவமேயம்; போன்ற இரண்டை யும் ஒப்பிடும் உவம உருபு; மலர்ச்சி: இரண்டிற்கும் உள்ள பொதுத்தன்மை ஆகும். உவமத் தொடரில் உவமானம் முன்னும், உவமேயம் பின்னு மாக வரும். உவமையை உருவகமாக மாற்றல் : இவ்வுவமைத் தொடரை உருவகத் தொட்ராக மாற்ற வேண்டுமானல், உவம உருபாகிய 'போன்ற'