பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 23. மென்ருெடர்க் குற்றியலுகரங்கள், வன் ளுெடர்க் குற்றியலுகரங்களாகத் திரிந்தவழி வருகின்ற வல்லினம் மிகும். இரும்பு + பாதை=இருப்புப் பாதை குரங்கு + கால் = குரங்குக் கால் 24. ஐகாரச் சாரியைபெற்ற குற்றுகரங்கட்கு முன் னும் வலி மிகும். நேற்று + ஐ + பொழுது = நேற்றைப் பொழுது 25. அத்து, இற்றுச் சாரியைகளின் முன்னும் வல்லினம் மிகும். H = குன்றம் + அத்து + கோயில் = குன்றத்துக்கோயில் மரம் + அத்து + கோடு = மரத்துக் கோடு பது + இற்று + பத்து= பதிற்றுப் பத்து வலிமிகா இடங்கள் : 1. உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது. நன்மை + தீமை= நன்மை தீமை அன்பு + பண்பு= அன்பு பண்பு 2. வினைத் தொகையில் வல்லினம் மிகாது. பாய் + புனல் = பாய் புனல் செய் + தொழில் = செய் தொழில் 3. இரண்டாம் வேற்றுமைத் தொகை, ஆளும் வேற்றுமைத் தொகை ஆகியவற்றில் வல்லினம் மிகாது. நீர் + குடித்தாள் = நீர் குடித்தாள் மகளிர் +கை = மகளிர் கை 4. மூன்றம் வேற்றுமை விரி, ஆறம் வேற்றுமை விரி ஆகியவற்றின் முன் வல்லினம் மிகாது.