பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 எனவே, இது பொருளாகுபெயர் அல்லது. முதலாகு பெயர் எனப்படும். 'உலகம் மகிழ்ந்தது-இங்கே உலகம் என்ற இடத்தின் பெயர், அவ்விடத்தோடு தொடர்பு கொண்டு வாழ்கின்ற மக்களுக்கு ஆகி வந்துள் ளது. எனவே இ.து இடவாகுபெயர் எனப் படும். 'கார்த்திகை பூத்தது-இங்கே கார்த்திகை என்னும் காலத்தின் பெயர், அக் காலத்தில் மலர்ந்த பூவுக்கு ஆகி வந்துள்ளது. எனவே, இது ‘காலவாகுபெயர்’ எனப்படும். வெற்றிலே கட்டான்-இங்கே வெற்றிலே என்னும் சினைப்பொருளின் பெயர், அதைேடு தொடர்புடைய கொடி என்னும் முதற்பொருளுக்கு ஆகி வந்துள்ளது. எனவே, இது சினையாகு பெயர் எனப்படும். (சினைப்பெயர், முதற்பெய ருக்கு ஆகிவந்தால், அது சினையாகுபெயர் எனப் படும். முதற் பெயர், சினேப்பெயருக்கு ஆகிவக் தால், அது முதலாகுபெயர் அல்லது பொருளாகு பெயர் எனப்படும்.) வெள்ளே உழுதது-இங்கே வெள்ளே என் னும் கிறப்பெயர், அந் நிறத்தினை உடெய காளைக்கு ஆகி வந்துள்ளது. எனவே, இது குண வாகுபெயர் அல்லது பண்பாகுபெயர் எனப் படும். 'பொங்கல் உண்டான்-இங்கே பொங்குதல் என்ற தொழிலின் பெயர், அத் தொழிலே அடைந்த உணவுக்குப் பெயராக வந்துள்ளது. எனவே, இது