பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 பயனும் உடன் தொக்க தொகை எனப்படும். இங் கனமே பிற தொகைகளும் அமையும். இங்ாவனம், இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை வரையுள்ள, ஆறு வேற்றுமைத் தொகைகளின் புறத்தே, அன்மொழித் தொகை பிறக்கும். "தாழ்குழல் பாடினுள் - இது, தாழும்தாழ்ந்த-தாழ்கின்ற குழலினை உடைய பெண் பாடினுள் என விரியும். எனவே, இது வினைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை யாகும். (குழல் கூந்தல்.) ‘கருங்குழல் சென்ருள்-இது கருமையாகிய கூந்தலையுடைய பெண் சென்ருள் என விரியும். எனவே இது, பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன் மொழித் தொகை யாகும் i துடியிடை கின்றள் - இது, துடிபோலும் இடையினை உடைய பெண் கின்ருள் என விரியும். எனவே, இ.து உவமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகும். (துடிஉடுக்கை.) 'தகரஞாழல்’-இது, தகரமும் ஞாழலும் கலக் துண்டாகிய சாந்து என விரியும். எனவே, இ..து உம்மைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகும். (தகரஞாழல்-மணப் பொருள்கள்)