பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 - ஆகுபெயருக்கும்-அன்மொழித் தொகைக்கும் வேறுபாடு 1. ஆகுபெயர், ஒரே சொல்லாக இருக்கும். அன்மொழித்தொகை, பல சொற்கள் சேர்ந்ததாக இருக்கும். 2. ஆகுபெயர், பொருள், இடம், காலம், பினே, குணம், தொழில் முதலாயவற்றின் அடி யாகப் பிறக்கும். அன்மொழித்தொகை, வேற்று மைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகையின் அடி யாகப் பிறக்கும். 8. ஆகுபெயர், தொன்று தொட்டுத் தொடர் புடைய ஒன்றற்கு ஆகிவரும். அன்மொழித் தொகை, இடத்திற்கு ஏற்பப் புதிது புதிதாக அமைக்கப்பட்டு வரும். 4. பொதுவினைகள் கண்டேன் - சென்றேன் வாழ்க - உண்க 'கண்டேன், சென்றேன்’ என்ற வினைச்சொற் களில் இறந்த காலமும், தன்மை இடமும் தெரி கின்றன. ஆனால், தினேயும் பாலும் தெரியவில்லை. எனவே, இவ் வினைச் சொற்கள் இருதினைப் பொது வினைகளாகும். வாழ்க அவன்-அவள்-அவர்- அது-அவை உண்க யான்-யாம்-நீ-ரீ விர்