பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 இங்கு, அன்-என்-ஏன் என்னும் மூன்று விகுதிகளையும் ஈற்றிலே உடைய தன்மை ஒருமைக் குறிப்பு வினைமுற்றுச் சொற்கள், இருதினைப் பொதுவினைகளாக வந்துள்ளன. இலக்கண விதி: கு-டு-து-று என்னும் குற்றிய லுகர விகுதிகளும், அல்-அன்-என்-ஏன் என்னும் ாான்கு மெய்யிற்று விகுதிகளும் ஆகிய இவ் வெட்டு விகுதிகளையும் இறுதியிலே உடைய சொற்கள், இருதினே யிடத்தனவாகிய ஒருவன், ஒருத்தி, ஒன்று என்னும் முன்று பால்களுக்குப் பொதுவாகிய, தன்மை ஒருமைத் தெரிகிலே வினை முற்றும், குறிப்புமுற்றுக்களும் ஆகும். (இவை இருதினேப் பொதுவினைகளாகும்.) (தன்மைப் பன்மை வினைமுற்றுக்கள்) (இருதினேப் பொதுவினே) உண்டனம்-உண்கின்றனம்-உண்பம் யாம்-யானும் உண்டாம்-உண்கின்ரும்-உண்பாம் ங்யும் இங்கு, அம்-ஆம்’ என்ற விகுதிகளே இறுதி யிலே உடைய தன்மைப் பன்மைத் தெரிகிலே வினே முற்றுச் சொற்கள், தனித்தும், முன்னிலையை உளப்படுத்தியும் மூன்று காலங்களிலும் இரு தினேப் பொதுவினேகளாக வந்துள்ளன. உண்டனெம்-உண்கின்றனெம்-உண்பெம்) யாம் உண்டேம்-உண்கின்றேம்-உண்பேம் யானு ம் உண்டோம்-உண்கின் ருேம்-உண்போம் அவனும் இங்கு, எம்-ஏம்-ஓம்’ என்ற விகுதிகளே இறுதியிலே உடைய தன்மைப் பன்மைத் தெரி கிலே வினைமுற்றுச் சொற்கள், தனித்தும், படர்க்