பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 கள் முன்னிலைப் பன்மையில் வந்துள்ளன். இலக்கண விதி: பகர மெய்யும், வகர மெய்யும் ஐம்பால் மூவிடங்களிலும் எதிர்காலத்தைக் காட் டும் வினைப் பகுபதங்களினுடைய இடைநிலை களாகும். இம் முக்கால இடைநிலைகள், சில முற்று வினை எச்சவினைகட்கு இலவாம். இவற்றில், ப்-வ்' என்ற எதிர்கால இடைநிலை பவ்வ மூவிடத் தைம்பா லெதிர்பொழு திசைவினை யிடைநிலை யாமிவை சிலவில. (ந-நூற்பா 144.) (காலங்காட்டும் விகுதிகள்-பகுதிகள்) இதுவரை, வினைச்சொற்களில் இடைநிலைகள் காலங்காட்டுவதைப் பார்த்தோம். இனி, விகுதி களும், ஒருசில பகுதிகளும் காலங்காட்டுவதைப் பற்றிப் பார்ப்போம். நான் சென்று (நான் சென்றேன்) நாம் சென்றும் (காம் சென்ருேம்) நான் சேறு (கான் செல்வேன்) நாம் சேறும் (காம் செல்வோம்) இங்கு,'று’ என்ற தன்மை ஒருமை விகுதியும், 'றும் என்ற தன்மைப் பன்மை விகுதியும் இறந்த காலத்தையும், எதிர் காலத்தையும் காட்டின. நான் வந்து (கான் வந்தேன்) நாம் வந்தும் (காம் வந்தோம்) நான் வருது (கான் வருவேன்) நாம் வருதும் (காம் வருவோம்)