பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
50
இங்கு, 'ய்' என்ற இடைநிலை இறந்தகாலமும்,

'ஆகிடந்து', 'ஆவிருந்து' என்னும் இடைநிலை கள் நிகழ்காலமும் காட்டின.

என்றிசினோர்-என்மர்-என்மனுர்

இங்கு,என்றிசினோர் என்பதில் உள்ள ’இசின்’

என்பது, இறந்தகால இடைநிலையாகவும், என்மர் என்பதில் உள்ள 'ம்' என்னும் மகர மெய்யும், என்மனுர் என்பதில் உள்ள மன்’ என்பதும் எதிர் கால இடைநிலைகளாகவும் செய்யுளில் வரும்.

மேலும், ’காண்டும்’ (காண் + டும்) என்ற

சொல்லில் உள்ள ’டும்’ என்னும் விகுதியும், ‘செய்கேன்’ (செய்+க்+ ஏன்) என்ற சொல்லில் உள்ள 'க்' என்ற இடைநிலையும், ’காண்போம், செய்வேன்' என எதிர்காலத்தை உணர்த்தியும் வரும்.

இலக்கண விதி: வினைச்சொற்களில் இறந்த

கால நிகழ்கால எதிர்கால இடைகநிலைகளே அன்றி, விகுதியும் பகுதியும், வேறு இடைநிலையும் காலங் காட்டும். அவை: று-றும் என்ற விகுதிகள் இறந்த காலத்தையும் எதிர்காலத்தையும், து-தும் என்ற விகுதிகள் இறந்த காலத்தையும் எதிர்காலத்தை யும், டு-டும் என்ற விகுதிகள் இறந்த காலத்தை யும், கு-கும் என்ற விகுதிகள் எதிர்காலத்தையும், (மின்-இர்-ஈர்-உம், ஆய்) என்னும் ஏவல் விகுதி களும், (க-இய-இயர்) என்னும் வியங்கோள் விகுதிகளும் எதிர்காலத்தையும், இ-மார் என்னும் விகுதிகள் எதிர்காலத்தையும், 'ப' என்னும் விகுதி