பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 அவ் வினைமுற்றுக்கள் தன்மை முன்னிலை யிலும் வரும். அவை வருமாறு: நான் வேறு-நான் உண்டு-நான் இல்லை (ஒருமை) நாம் வேறு-நாம் உண்டு-நாம் இல்லை (பன்மை) இவ் வெடுத்துக்காட்டுக்களில்வேறு-உண்டுஇல்லை என்னும் குறிப்பு வினைமுற்றுக்கள், தன்மை ஒருமையிலும், பன்மையிலும் வர். துள்ளன. நீ வேறு - நி உண்டு - நீ இல்லை (ஒருமை) நீவிர் வேறு - நீவிர் உண்டு - நீவிர் இல்லை (பன்மை) இங்கு, வேறு-உண்டு-இல்லை' என்னும் குறிப்பு வினைமுற்றுக்கள், முன்னிலை ஒருமை யிலும், பன்மையிலும் வந்துள்ளன. இலக்கண விதி : வேறு-இல்லை-உண்டு என் னும் முன்று வினைக்குறிப்பு முற்றுக்கள், ஐம்பாலுக்கும் முவிடத்திற்கும் உரியனவாகும். வேறில்லை யுண்டைம் பான் மூ விடத்தன. (த-நூற்பா 3 39.) (பாற் பொதுவினை) ("யார்' என்னும் விவிைனைக் குறிப்பு முற்று) அவன் யார்? அவள் யார்? அவர் யார்? இவ் வெடுத்துக்காட்டுக்களில் உள்ள 'யார்” என்பது வினப்பொருளைத் தரும் வினைமுற்றகும். அது, தொழிலையும், காலத்தையும், வெளிப்படை