பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 அவன் சேவடி சேர்துமன்றே - அன்று: பணியுமாம் என்றும் பெருமை - ஆம் நீர்தாம் - தாம் கீதான் - தான் வாழ்வான் ஆசைப்பட்டிருக்கின்றேன்- கின்று நின் ருர் கிழலடைந்தே - நின்று ‘வாழ்வான் ஆசைப்பட்டிருக்கின்றேன்' என்ற தொடரில் உள்ள, ஆசைப்பட்டிருக்கின்றேன் என்பது, ஆசைப்பட்டேன்' என இறந்த காலப் பொருளில் வந்துள்ளது. எனவே, இங்கு உள்ள 'கின்று என்பது நிகழ்கால இடைநிலை யன்று; அசைச் சொல்லாகும். இலக்கண விதி: யா, கா, பிற, பிறக்கு,அரோ, போ, மாது, இகும், சின், குரை, ஒரும், போலும், இருந்து, இட்டு, அன்று, ஆம், தாம், தான், கின்று, நின்று என்னும் இவ் விருபது இடைச் சொற்களும் எல்லா இடங்களிலும் வரும் அசைச் சொற்களாம். யாகா பிறபிறக் கரோபோ மாதிகும் சின்குரை ஒரும் போலும் இருந்திட் டன் ருந் தாந்தான் கின்றுநின் றசைமொழி. (ந - நூற்பா 441.), 10. பெயர்-வினை-இடை-உரிச்சொற்கள் (1) பெயர்ச் சொல் மரம் - பனை அணி - முடி