பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 இங்கு, மரம் - பனே' என்பன இடுகுறிப் பெயர்களாகும். மரம் என்றும் பனே என்றும் பெயர்கள் ஏற்பட்டதற்குரிய காரணங்கள் எதுவும் தெரியவில்லை. அவை, தொன்று தொட்டு இட்ட குறியாய் வழங்கி வருகின்றன. எனவே, மரம், பனை என்பன இடுகுறிப் பெயர்களாகும். அணி - முடி’ என்பன காரணப் பெயர்களா கும். அணியப்படுதலின் அணி என்றும்,முடியில் சூட்டப்படுதலின் முடி’ என்றும் பெயர்பெற்றன. எனவே, அணி - முடி’ என்பன காரணப் பெயர் களாகும். இங்ாவனம், இடுகுறியும் காரணக் குறிய மாகிய, இடுகுறிப் பெயரும் காரணப் பெயரும், மரபினையும் ஆக்கப்பாட்டினையும் தொடர்ந்து வரும். அங்ங்னம் வரும்பொழுது வினையால் அணையும் பெயர் மட்டும் காலங் காட்டும். மற்றவை காலங் காட்டா. எட்டு வேற்றுமைக்கும் இடமாகி, இருதினே ஐம்பால் முவிடத்து ஒன்றனே ஏற்பனவும் பலவற்றினை ஏற்பனவுமாகி வருவம். பொதுவாக இங்ாவனம் வருபவை எல் லாம் பெயர்ச் சொற்கள் எனப்படும். இனி, இங்ங்னம் வருகின்ற பெயர்ச் சொற் களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். மா - தென்னை (இடுகுறி மரபுப் பெயர்கள்) விலங்கு - பறவை (காரணக் குறி மரபுப் பெயர்கள் ) இட்ட குறியாக வழங்கும் மா-தென்னே எ ன் னும் இடுகுறிப் பெயர்கள், இடையே ஒருவரால்