பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 முருகனுக்குக் கொடுத்தேன் - நான்காம் வேற்றுமை(கு) முருகனின் மூப்பு யான் - ஐந்தாம் வேற்றுமை (இன்) முருகனது கை - ஆறும் வேற்றுமை (அது) முருகனின்கண் இருக்கின்ற பேணு - ஏழாம் வேற்றுமை (கண்) முருகா வா - எட்டாம் வேற்றுமை (விளி வேற்றுமை) இங்கு, முருகன் என்ற பெயர்ச்சொல் எட்டு வேற்றுமைப் பொருள்களுக்கும் இடமாகியது போலப் பிற பெயர்ச்சொற்கள் எல்லாம், எட்டு வேற்றுமைப் பொருள்களுக்கும் இடமாகி வரும். இனி, இருதினே ஐம்பால் முவிடத் ஆl ஒன்றன ஏற்பனவும், பலவற்றினை ஏற்பனவு மாகிய பெயர்களைப் பற்றிப் பார்ப்போம். உயர்திணை ஆண் - பெண் - பலர்பாற் பெயர்கள் (பொருளால் வருபெயர்கள்) தமன் - நமன் - துமன் - எமன் - (ஆண்பால்) தமள் நமள் - துமள் - எமள் - (பெண்பால்) தமர் - நமர் - துமர் - எமர் - (பலர்பால்) இவையும், இவை போல்வனவுமாகிய கிளே, எண் முதலியன பற்றிய பெயர்கள் எல்லாம், உயர்தினை ஆண் - பெண் - பலர்பால்களில், பொருளால் வருபெயர்களாகும். (இடத்தால் வருபெயர்கள்) வெற்பன் - எயினன் - ஆயன் மகிழ்நன் - துறைவன் - கருவூரான் குறத்தி - எயிற்றி - ஆய்ச்சி உழத்தி - பரத்தி - கருவூராள் - (ஆண்பால்) - (பெண்பால்)