பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 குறவர் - எயினர் - ஆயர் (பலர்பால்) - H. + - I உழவா - பரதவா - கருவூராா இவையும், இவை போல்வனவுமாகிய திணை, உவர் முதலியன பற்றிய பெயர்கள் எல்லாம், உயர்தினை ஆண்-பெண் - பலர்பால்களில், இடத் தால் வருபெயர்களாகும். (காலத்தால் வருபெயர்கள்) மூவாட்டையான் - வேனிலான் - ஆதிரையான் -(ஆண்பால்) மூவாட்டையாள் - வேனிலாள் - ஆதிரையாள் -(பெண்பால்) மூவாட்டையார் - வேனிலார் - ஆதிரையார் -(பலர்பால்) இவையும், இவை போல்வனவுமாகிய ஆண்டு, பருவம், மாதம், நாண்மீன் முதலியன பற்றிய பெயர்கள் எல்லாம், உயர்தினை ஆண் - பெண் - பலர்பால்களில், காலத்தால் வருபெயர்களாகும். (சினையால் வருபெயர்கள்) குழைக்காதன் - நெடுங்கையன் - (ஆண்பால்) குழைக்காதாள் - நெடுங்கையாள் - (பெண்பால்) குழைக்காதர் - நெடுங்காதர் - (பலர்பால்) இவையும், இவை போல்வனவுமாகிய தோள், குழல், மார்பு, கண், காது, கை முதலிய உறுப் புக்கள் பற்றிய பெயர்கள் எல்லாம், உயர்திணை ஆண்-பெண் - பலர்பாலில், சினையால் வரு பெயர்களாகும்.