பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



64

(குணத்தால் வருபெயர்கள்)
பெரியன் - கரியன் - கூனன் - (ஆண்பால்)
பெரியள்- கரியள் - கூனி - (பெண் பால்)
பெரியர் - கரியர் - கூனர் - (பலர்பால்)


இவையும், இவை போல்வனவுமாகிய அளவு,

அறிவு, ஒப்பு, வடிவு, நிறம், கதி, சாதி, குடி,

சிறப்பு முதலியன பற்றிய பெயர்கள் எல்லாம்,

உயர்திணை ஆண் - பெண் - பலர்பாலில், குணத்

தால் வருபெயர்களாகும்.

(தொழிலால் வருபெயர்கள்)
ஓதுவான் - ஈவான் - (ஆண்பால்)
ஓதுவாள் - ஈவாள் - (பெண்பால்)
ஓதுவார் - ஈவார் - (பலர்பால்)


இங்ஙனம், ஒதல், ஈதல் முதலியன பற்றிய

பெயர்கள் எல்லாம், உயர்திணை ஆண் - பெண்

- பலர்பாலில், தொழிலால் வருபெயர்களாகும்.


இவை அனைத்தும் பொருளாதி ஆறன் அடி

யாகப் பிறந்து, இருதிணையில் உயர்திணையை

யும், ஐம்பால்களில் ஆண்பால், பெண்பால், பலர்

பால்களையும் தனித்தனியே ஏற்று நின்ற பெயர்

களாகும்.

இவை தவிர, உயர்திணை ஆண் - பெண் -

பலர்பாற் பெயர்களாக வருவனவும் உள.

அஃறிணை ஒன்றன்பாற் பெயர்கள்


எது - ஏது - யாது } துவ்விகுதி வினைப் பெயர்கள்