பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 இடுகுறி காரண மரபோ டாக்கம் தொடர்ந்து தொழிலல காலந் தோற்ரு வேற்றுமைக் கிடனுய்த் திணைபா லிடத்தொன் றேற்பவும் பொதுவு மாவன பெயரே. (ந-நூற்பா 275.) 2. வினைச்சொல் (1) தெரிநிலை வினை சேணியன் ஆடை நெய்தான் இத்தொடரில் நெய்தான் என்னும் வினைச் சொல், நெய்தலாகிய தொழில் முற்றுப் பெற்ற தையும், இறந்த காலத்தையும் உணர்த்துகிறது. எனவே, நெய்தான் என்பது தெரிகில வினை முற்றகும். காலம் வெளிப்படையாகத் தெரிய நிற்கும் வினை, தெரிநிலை வினை எனப்படும். இங்ங்ணம் வருகின்ற தெரிநிலை வினைமுற் றுச் சொற்கள், செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செயப்படுபொருள் என்ற ஆறனையும் தரும. (1) (2) (3) (4) (5) (6) செய்பவன்-(சேணியன்) கருவி-(நூல்) நிலம்-(வீடு-இடம்) செயல்-(நெய்தல்) காலம்-(இறந்த காலம்) செயப்படுபொருள்-(ஆடை) நெய்தான் என்ற தெரிநிலை வினைமுற்றுச் சொல்லானது, சேணியனுகிய கெய்பவனையும்,