பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 எனவே, படித்த’ என்பது தெரிநிலைப் பெயரெச்ச மாகும். (தெரிநிலை வினையெச்சம்) படித்துத் தேறினுன் இங்கே, படித்து' என்ற வினைச்சொல், பகுதி யால் தொழிலையும், இடைநிலையால் காலத்தையும் வெளிப்படையாக உணர்த்துகிறது. தினேபால் உணர்த்தும் விகுதி இன்மையால் படித்து' என்ற சொல் முற்றுப் பெறவில்லை. எனவே, படித்து’ என்பது எச்சவினையாகும். அது,தேறினன் என்ற வினைச் சொல்லைச் சார்ந்து முற்றுப் பெறுகிறது. எனவே, படித்து என்பது தெரிகிலே வினையெச்ச மாகும். இங்ாவனம், தெரிநிலை வினைமுற்று, தெரி நிலைப் பெயரெச்சம், தெரிகிலே வினையெச்சம் எனத் தெரிநிலை வினை மூன்று வகைப்படும். (குறிப்பு வினைமுற்று) அவன் நல்லவன் இங்கு, கல்லவன்’ என்பது தொழிலேயும் காலத்தையும் வெளிப்படையாக உணர்த்தாமல், குறிப்பாக உணர்த்தித் திணை பால் காட்டும் விகுதியுடன் முற்றுப் பெற்றுள்ளது. எனவே, கல்லவன் என்பது குறிப்பு வினை முற்ருகும். (குறிப்புப் பெயரெச்சம்) நல்ல பையன் ா. இங்கு, கல்ல’ என்பது தொழிலையும் காலத் தையும் குறிப்பாக உணர்த்திப் பையன் என்ற