பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SO அன்-ஆன்-அள்-ஆள் போன்ற விகுதிகளும் இடைச்சொற்களாகும். (3) சாரியைகள்: அற்று-அத்து-அன்-ஆன் அம்-இன் போன்ற சாரியைகள் இடைச்சொற்க ளாகும். (4) உவம உருபுகள்: போல - புரைய - ஒப்புஉறழ என்பன போன்ற உவம உருபுகள் இடைச் சொற்களாகும். (5) தத்தம் பொருள் உணர்த்தும் சொற்கள்: ஏ-ஓஉம்-கொல்-தான்-மன் என்பன போலத் தத்தம் பொருள் உணர்த்தும் சொற்கள் இடைச்சொற். களாகும். (6) இசைநிறை: ஏஎ-ஒஒ என்பன போலத் தமக்கெனப் பொருளின்றிச் செய்யுளின் ஒசையை நிறைக்க வரும் இசைநிறைகள் இடைச்சொற். களாகும். (7) அசைநிலை: கொல் - ஆல்-ஏ - ஒ- அரோ என்பன போல, வேறு பொருளின்றி அசை நி2லப் பொருளில் வரும் அசைநிலைகள் இடைச் சொற்களாகும். (8) குறிப்பால் பொருள்தரும் சொற்கள்: கோவென, சோவென, கடகடென, படபடென என்பன போல ஒலிக்குறிப்புப் பொருளைத் தரும் சொற். களும், துண்ணென, திடுக்கென என்பன போல அச்சக் குறிப்புப் பொருளேத் தரும் சொற்களும், பொள்ளென, பொருக்கென என்பன போல