பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 அறிதொறறியாமை சேரி தோறிது தொறு-தோறு’ என்பன இடப்பன்மைப் பொருள்தரும் இடைச்சொற்களாகும். அந்தோ இழந்தான் அஆ என்ன உயரம் அந்தோ, என்னும் சொல் இரக்கப்பொருளை: யும், அஆ’ என்னும் சொல் வியப்புப் பொருளை யும் தரும் இடைச்சொற்களாகும். வாளா இருந்தான் சும்மா இருந்தான் "வாளா-சும்மா” என்பன பயனின்மைப் பொருளைத்தரும் இடைச் சொற்களாகும். இவை தவிர, இன்னும் வருவனவும் உள. இலக்கண விதி : ஐ முதலிய வேற்றுமை உருபு களும், விகுதிகளும் இடைநிலைகளுமாகிய வினே உருபுகளும், அன்-ஆன் முதலிய சாரியை உருபு களும், போலப் புரைய முதலிய உவம உருபு களும், பிறவாறு தத்தமக்குரிய பொருளை உணர்த்தி வருவனவும், வேறு பொருளின்றிச் செய்யுளில் இசைநிறைத்தலே பொருளாக வரு வனவும், அசை கிலேயே பொருளாக நிற்பனவும், வெளிப்படையான் வரும் இவை போலாது, ஒலி, அச்சம், விரைவு இவற்றைக் குறிப்பால் உணர்த்தி வருவனவும் என, எட்டுவகையினை உடையவாய்த் தனித்து கடத்தலின்றிப் பெயரின் அகத்தும், வினையின் அகத்தும், அவற்றின் புறமாகிய பின் னும் முன்னும் ஆகிய இவ்விடங்கள் ஆறனுள்