பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 (ஒருகுணர் தழுவிய பல உரிச்சொற்கள்) சாலச் சிறந்தது உறு புகழ் தவச்சேய் நாட்டார் நனி வருந்தினை துணி கூர் எவ்வம் கழி கண்ணுேட்டம் மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களில் சால உறு-தவ-கனி-கூர்-கழி என்னும் ஆறு உரிச் சொற்களும், மிகுதி என்ற ஒரு குணத்தை உணர்த்தும் உரிச்சொற்களாகும். இவை, ஒரு குணம் தழுவிய பல உரிச்சொற்கள் எனப்படும். இன்னும், சொல் என்னும் ஒருகுணத்தை உணர்த்தும் பல உரிச்சொற்களும், ஒசை என் னும் ஒரு குணத்தை உணர்த்தும் பல உரிச்சொற் களும் உள. இலக்கண விதி: சால-உறு-தவ-கனி-கூர்-கழி என்ற இவ் வுரிச்சொற்கள் ஆறும், மிகுதியாகிய ஒருகுணத்தை உணர்த்தும் உரிச்சொற்களாகும். சால வுறுதவ நனிகூர் கழிமிகல். (ந-நூற்பா 45 ச.) (பலகுணங் தழுவிய ஒர் உரிச்சொல்) கடிககர்-காவலை உடைய நகரம் (காப்பு-காவல்) கடிவேல்-கூர்மையான வேல் (கூர்மை) கடிமாலே-வாசனை உடைய மாலை (மணம்-காற்றம்) கடிமார்பன்-விளங்கும் மார்புடையவன் (விளக்கம்)