40 தொடர்நிலைச் செய்யுள் ஆசிரியரைப் பற்றி : பெயர் : இளங்கோவடிகள். தந்தை : நெடுஞ்சேரலாதன். தாய் : நற்சோணை. ஊர் : திருவஞ்சைக்களம். காலம் : கி.பி. இரண்டாம் நூற்ருண்டு. இவர், தம் அண்ணன் செங்குட்டுவன் பொருட்டுத் துறவு பூண்டவர், இவர் உடன் காலத்தவராகிய சீத்தலைச் சாத்தனர் வேண்டிக்கொள்ள இந்நூலை இயற்றினர். களுத்திறம் உரைத்த காதை தேவந்தி என்னும் பார்ப்பனத் தோழிக்குக் கண்ணகி தான் கண்ட கனவை எடுத்துரைத்ததைச் சொல்லும் பகுதி. இது சிலப் பதிகாரத்தில் முதற் காண்டமாகிய புகார்க் கான்டத்தில் உளளது. கதைச் சுருக்கம் ஞாயிறு மறைந்த மாலைப் பொழுதிலே புகார் நகரில், மகளிர் கள், முறைப்படி_விளக்கேற்றி, இல்லுறை தெய்வத்தை வழிபட்டு, இரவிற்கேற்ற கோலம் புனைய சாத்தன் கோவிலில் வழிபாடு செய்யும் தேவந்தி என்பாள் கண்ணகிக்காகக் கோவிலையடைந்து வழிபட்டு வந்து, கண்ணகியை நோக்கிக் கணவனைப் பெறுக’ என் வாழ்த்தினள். அது கேட்ட கண்ணகி 'உன் வாழ்த்தால் நான் இபறுவேனுயினும் பான் கண்ட கனவினால் என் நெஞ்சம் இயுறு இறது என்று கூறிக் கனவினை எடுத்தியம்பினள். அதற்குத் தேவந்தி, நீ முற்பிறப்பில் கணவன் பொருட்டுக் கிர்க்க வ்ேண்டிய நோன்பு தப்பினய், அதல்ை சோமகுண்டம், சூரிய குண்டம் என் னும் பொய்கைகளில் நீராடிக் காமவேள் கோட்டத்தைத் தொழு வோம்;- தொழுதால் நற்பயன் பெறலாம் என்ருள். அதற்குச் கண்ணகி, துறை மூழ்கித் தெய்வந் தொழுதல் எங்கட்கு இயல் பன்று' என்று கூறியிருந்தாள். அப்பொழுது கோவலன் அங்கு வந்து வருந்தி, பரத்தையொடு மருவிப் பொருளையெல்லாம் இழந் தேன்; எனக்கு இது நாணத்தைத் தருகின்றது என்ருன். மாத்விக் குக் கொடுக்கப் பொருள் இல்லாமல் இங்ங்னங் கூறுகின்ருன் எனக் கருதிய கண்ணகி என்னிட்ம் இரண்டு சிலம்புகள் உள; அவற்றைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்ருள். உடனே கோவலன் அவற்றைப் பெற்று, 'இச்சிலம்பை முதலாகக் கொண்டு வாணிகஞ் செய்து, இழந்த பொருளை மீட்பேன் நீயும் என்னுடன் வருக என்றுரைத் துப் பொழுது புலருமுன்னே புறப்படத் தொடங்கினன்.
பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/45
தோற்றம்