பெரிய புராணம் 57 பன்னிரண்டு திருமுறைகளுள் இது பன்னிரண்டாந் திருமுறை வைச் சார்ந்ததாகும். இந்நூலின் ஆசிரியர் சேக்கிழார் பெருமா வைா. ஆசிரியரைப் பற்றி : பெயர் : சேக்கிழார். இவர் சேக்கிழார் குடியில் பிறந்தமை யால் இப்பெயர் பெற்ருர். இவருடைய இயற் பெயர் அருண்மொழித் தேவர். ஊர் : குன்றத்துரர். இது தொண்டை நாட்டில் உள்ளது. பட்டப் பெயர்கள் : உத்தம சோழப்பல்வர், தொண்டர்சீர் பரவுவாா. காலம் : கி.பி. 12-ஆம் நூற்ருண்டின் முதற்பகுதி என்பர். தொழில் : அநபாய சோழனிடம் அமைச்சர். இங்குப் பாடமாக வந்துள்ள பகுதி மெய்ப்பொருள் நாயனர் புராணமாகும். இது தில்லைவாழ் அந்தணர் சருக்கத்தில் உள்ளது. இவர் சிவநெறிச் சின்னங்களாகிய திருநீறு முதலியவற்றை மெய்ப் பொருளாகக்கொண்டு ஒழுகி வந்த காரணத்தால் மெய்ப்பொருள் நாயனுர் என்று பெயர் பெற்ருர். மெய்ப் பொருளார் கதைச் சுருக்கம் சேதி நாட்டுத் திருக்கோவலூரில் மெய்ப் பொருளார் நீதி வழுவா நெறி முறையில் அரசாண்டு வந்தார். சிவனடியார்கட் குத் தொண்டு செய்வதே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். முத்தநாதன் என்னும் அரசன் பலமுறை படையெடுத்துத் தோல்வியுற்ருன் இறுதியில், இவரை வேறு வழியில்தான் வெல் ல வேண்டும் என்று கருதிச் சிவவேடம் பூண்டு வந்து அரண்மனையுள் நுழைந்து, மெய்ப்பொருளாரிடம், உமக்கு ஞானோபதேசம் செய்ய வந்துள்ளேன்’ என்று கூறினன். அவர் பெரும்பேறென்று மகிழ்ந்து, தனித்தமர்ந்தனர். அப்பொழுது அவன் ஏட்டுச் சுவடி போல் மறைத்துக் கொண்டு வந்திருந்த உடை வாளை எடுத்து அவரைக் கொன்று விட் டான். அது தெரிந்த அவருடைய ஏவலாளன் தத்தன் என்பான் ஓடிவந்து, தவவேடம் பூண்டு வந்த முத்திநாதனைக் கொல்ல முயன்ருன். அப்பொழுது மெய்ப்பொருளார் 'தத்தா! இவர் நமர்; இவரை ஒன்றுஞ் செய்யாதே' என்று தடுத்தனர். அப் பொழுது தத்தன் யான் யாது செய்தல் வேண்டும்’ எனக் கேட் டான். இவர்க்கு, யாதொரு தீங்கும் வாராவண்ணம் நகர்க்கு வெளியே கொண்டு விட்டு வருக என்றனர். அவர் ஆணையின்படி முத்தநாதனை நகர்க்கு வெளியே கொண்டு போய் விட்டுவிட்டுத் திரும்பி வந்து தங்கள் ஆணைப்படியே செய்து விட்டேன்’ என்று: கூறலும், மெய்ப்பொருளார் இயற்கை எய்தினர்.
பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/60
தோற்றம்