27& .ொதடர்கிலேச் செய்யுள் ஆசிரியரைப் பற்றி : பெயர் : கம்பர் ஊர் : திருவழுந்துார், (தஞ்சை மாவட்டம்) மரபு : உவச்சர் என்றும். வேளாளர் என்றும் கூறுவர். ஆதரித்தவர் : திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்பவள்ளல். காலம் : கி. பி. 9-ஆம் நூற்ருண்டு என்று சிலரும், 12-ஆம் நூற்ருண்டு என்று சிலரும் கூறுவர். பெயர்க்காரணம் : இவருடைய இயற் பெயர் ஏ கம் பர் என்றும், அது கம்பர் என மருவி வழங்குகிறது என்றும் கூறுவர். இவர் கம்பநாடார் எனச் சில இடங்கனில் குறிக்கப் பெறுவதால் நாட்டின் பெயர் இவருக்கு அமைந் தது என்றும் கூறுவர். சிறப்புரைகள் : "கல்வியிற் பெரியன் கம்பன்' கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி சொல்லும்', 'கம்பனைப் போல்-யாங்கணுமே பிறந்ததில்லை”, “கம்பன் பிறந்த தமிழ்நாடு”, “விருத்தமெனும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்”, “கவிச் சக்கரவர்த்தி’. . வேறு நூல்கள் சடகோபர் அந்தாதி, சரசுவதி அந்தாதி, ஏர் எழுபது, திருக்கை வழக்கம் முதலியன. இவர், தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலுடைய பெயரைத் தாம் இயற்றிய இராமாயண நூலுள் பல இடங்களில் குறிப் பிட்டுள்ளமையால் கம்பருடைய செய்ந்நன்றி யறியும் பண்பு வெளிப்படுகின்றது. கைகேசி சூழ்வினைப் படலம் கைகேயி இராமனுடைய முடிசூட்டு விழாவிற்கு இடையூறு இசய்ய ஆலோசித்த தீய செய்கல்ச் சொல்லும் பகுதி என்பது பொருள். கே.கய நாட்டரசன் மகள் கைகேயி. அது கைகேன் என் மருவி வழங்கும். படலம் என்பது சிறு பிரிவு. காண்டம் என்பது பெரும் பிரிவு. இப்படலம் அயோத்திக் காண்டத்துள் உள்ளது. இக்காண்டத்திலுள்ள கைகேசி சூழ் வினைப்படலம், நகர் நீங்கு படலம் ஆகிய இரண்டு படலத்திலிருந்தும் சில பாடல்கள் பாட் மாக வந்துள்ளன. கதைச் சுருக்கம் கைகேயி தயரதன் வலிந்து இரு வரங்களைப் பெற்று விட்டாள். மன்னன் பெருந்துயரத்தோடு படுக்கையில் கிடந்தான், அப் பொழுது வசிட்டன் ஏவலால் சுமந்திரன் மன்னன அழை த்து வரக் கைகேயியின் மாளிகைக்கு வந்தான். தயரதன் இராமனை அழை த்து வா என ஏவ, சுமந்திரன் இராமனை அழைத்து வருகின்ரு ன். வரும் இராமனிடம், கைகேயி தான் பெற்ற வரத்தைத் தானே இராமனிடம் கூற எதிர் சென்ருள். இராமன் கைகேயியை வணங்கி
பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/81
தோற்றம்