பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

‘எல்லா மதங்களுமுண் டென்றாலும் ஓர்பகையும்
அல்லா மதமொன்றே ஆக்கிடுக மானிடமே,
கூறாய்ப் பிரியல்' எனக் கூறியிங்கு யாவரையும்
சீறா நலங்கொண்டு சேர்த்தணைக்குஞ் செந்தமிழே,
'சாதி சமயமென்று சண்டையிட்டு மாயாதீர்
சோதி வடிவொன்றே தூய இறை' என்று
வள்ளலருட் பாவில் வடித்தெடுத்த தேன்சுவையே,
உள்ளம் உருக்கி உணர்விக்கும் தெள்ளமுதே,
என்று புகழ்பாடி என்னம்மை தாள்பணிந்தேன்
........................................................................
........................................................................

[தமிழ் முழக்கம்]

('பாட்டுப்பறவைகள்' எனுந்தலைப்பில் பாடப்பெற்ற கவிதையிலிருந்து எடுக்கப்பெற்ற சில அடிகள் மட்டும் இங்கு தரப்பட்டுள்ளன.)