பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

81

பிறமொழி தீதெனப் பேசலும் அறிகிலம்
உரியநம் மொழியே உயர்வுறல் வேண்டி
இரவும் பகலும் இடரிலும் முயல்வேம்:
யாதும் ஊரெனில் எம்முடை ஊரகம்
தீதுறல் வேண்டுமோ? சீருறல் தீமையோ?
யாவரும் கேளெனில் யாயு[1]டன் தந்தையும்
மேவருங்[2] கேடுகள் மேவுதல் வேண்டுமோ?
அன்னவர் நலம்பெற ஆர்வம் பூணுதல்
புன்மையோ?[3] பகையும் பூத்திடல் என்னையோ?[4]
உலகப் புகழ்பெறு தலைவரும் கவிஞரும்
பலகற் றடங்கிய பண்புயர் மாந்தரும்
தாய்மொழி வேட்கை தணிந்திலர்[5] துறந்திலர்:
ஆய்புலப் பாங்கினர் அறிகுவர் இதனை:
தமிழின் பகைவர் சாற்றும் மொழியினை
உமிழ்க! மெய்ம்மை உணர்க எழுக’
.....................................................










  1. யாய்-தாய்
  2. மேவரும்-விரும்பத்தகாத
  3. புன்மையோ?-இழிவோ
  4. என்னயோ?-ஏனோ?
  5. தணிந்திலர் -அடங்கினாரிலர்