பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

83

தமிழ்விழை யாரும் தம்வயிற் றுணவே
அமிழ்தெனத் தேடி அலைந்துழல் வாரும்,
உரிமை வாழ்வினைக் கருதகில் லாரும்
அடிமை வாழ்வினி லமைதி கொள்வாரும்
தமிழறி வில்லாத் தமிழருந் தாமே
அயன்மொழி யிசையே அரங்கினிற் பாடுவர்
மயலுணர் வுடையீர்! மற்றொன் றறைகுவல்
எம்மொழி யாயினும் இசையினி லேற்போர்
நம்மொழி ஒதுக்குதல் நன்றுடைச் செயலோ?
ஏற்போர் ஏற்க இசையுணர் பெரியீர்!
காற்கூ ற[1]றிவாற் கழறுதல் தவிர்க!
இசைவளந் தமிழில் இலைஎனப் பிதற்றல்
வசையுமக் காகும்; வாய்மதம்[2] ஒழிக!
முத்தமிழ் என்றொரு முறைவைப் புளதை
மெத்தவும் மறந்தீர்! மெய்ம்மையை இகழ்ந்தீர்!
நெஞ்சறி பொய்யை நிகழ்த்துதி ராயின்
பஞ்சென அதுதான் பறப்பதிங் கொருதலை;
...................................................




  1. காற்கூறு - கால்பங்கு
  2. வாய்மதம் - வாய்ச்செருக்கு