பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

ஒடுங்கிய எலும்பினை உருவெழில் குறைவிலா
மடந்தையின் வடிவா மாற்றிய தெம்மொழி?
அருமறை வினைஞரால் அடைபடு கதவம்
திருமறைக் காட்டில் திறந்ததும் எம்மொழி?
கணிகணன் முன்செல மணிவணன் அடியிணை
பணிதிரு மழிசையர் பதறினர் பின்செலப்
படப்பாய் அணைமேல் பாற்கடல் மிசையே
கிடப்போன் தன்மனைக் கிழத்தியும் உடன்வர
அரவ[1]ணைச் சுருட்டோ[2] டாங்கவர் தொடர்ந்து
பரிவுடன் ஓடப் பண்ணிய தெம்மொழி?
அம்மொழி நம்மொழி அத்துணைப் பெருமையும்
செம்மையின் எமக்கெலாம் செப்பியோர் நீவிர்
இன்றிவை மறந்தீர்! எதிர்ப்புரை கிளந்தீர்
கன்றிய மனத்தாற் கரவுரை[3] புகன்றீர்
மந்திர வலிமை செந்தமிழ்க் கிலையெனில்
இந்தநல் லருஞ்செயல் எவ்வணம் இயலும்?
கடகரி[4] உரியன் கடும்புலி யதளன்[5]
சடையினை மறைத்து மணிமுடி தரித்து
விடைக்கொடி[6] விடுத்துக் கயற்கொடி எடுத்து
விடவர வொழித்து வேம்பலர்[7] முடித்துத்


  1. கதவம்-கதவு
  2. சுருட்டு - (படுக்கைச்) சுருள்
  3. கரவுரை - வஞ்சனை மொழி
  4. கடகரி - மதயானை, உரியன்
  5. அதளன் - தோலாடையன்
  6. விடைக்கொடி -எருக்கொடி
  7. வேம்பலர் - வேப்பம்பூ