உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம்பெருவழுதி கடம்பன் கடம்பன் நாடு தூற்ற நானென் செய்தேன்? கேடு நினையுங் கீழ்மையென் கண்டனை? கேடிது போலக் கேட்டிலேன் முன்னர் நாடழி வுறலால் விளைபயன் நமக்கென்? நாடழி வுறுசெயல் யானோ நயந்தனன்? உயிர்உயிர் என்றெனை உவந்துவந் தழைத்தனை செயிர்கொள யானிவண் செய்பிழை யாது. பிழைசெய் தனையெனப் பேசவோ செய்தேன்? மழையெனப் புனல்விழி பொழிவதும் என்னோ? கண்ணே மணியே கார்குழற் பாவாய் பெண்ணே உயிரே பின்பிறந் தாளே அன்னாய் என்றெலாம் அழைத்தனை களித்தனை என்னோ நீதான் இப்பிழை செய்தனை? கண்ணே மணியெனக் கருதுவ தென்றும் உண்மை யம்மா ஒருபிழை கருதேன்; பிழைபிழை யென்று பேசுதி யென்கொல்? விளைந்தது யாதென விளம்புதி இன்னே: தூசு படிந்தென் துணைவிழி கலங்கின் வீசு வெயிலின் விழுமென் புழுப்போல் துடிதுடித் தெழுவை துவள்வை; அவ்விழி கொடிபிடித் தெனநீர் கொட்டுமா றியற்றினை, ஒருமுடி கலையின் ஒதுக்கிநின் கைகொடு வருடி வருடி வருந்துவை திருத்துவை: இன்றோ கலைந்த கூத்தலும் கம்பலைக் குரலும் உலர்ந்த இதழும் ஒழுகிய விழியும் யான்பெறச் செய்தனை அளியோய் இனியே வான்வழிப் படர்குவென் வாழ்வினி வேண்டேன்;