பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27.4 . கவியரசர் முடியரசன் படைப்புகள்- 8 கடம்பன் உணர்ச்சித் துடிப்பின் உதிர்த்தனை சுடுமொழி துணர்ப்பூங் கோதாய் துடிதுடித் துரைத்த நின்மொழி என்னை நெடுவே லாகிப் புண்படச் செய்தன; புலம்புதி யென்கொல்? குழவி : பின்னவள் வாழ்வைப் பேணா நின்றன் புன்செயல் கண்டபின் புலம்பா தென்செய? குழவி மணமலர் அணியுமென் மலர்முகங் காணாது பிணமலர் சூட்டும் பெருந்தீங் கிழைத்தனை: உயிரிலா உடலை ஒளியெரி கொழுவ அயலில் நின்றழு அன்னையின் அன்பை நின்பாற் கண்டு நேரிழை வாழ்ந்தேன் என்பால் எரிகுணம் ஏன்கொண் டனைநீ உடன்பிறந் தேகொலும் உறுபிணி யென்பர் உடன்பிறந் தெனக்குநீ ஓர்பிணி யாகினை கடம்பன் பேதைநின் வாழ்வைப் பேணுதற் கென்றே மேதினி மிசையுயிர், மெல்லுடல் சுமந்துளேள்: பெண்ணெ நின்னை என்ணே னாகி ஆண்மகற் குரிய அரும்கடைப் பயிற்சி அளித்து வளர்த்தேன் அதற்கோ இம்மொழி? தக்கோன் நினைக்குத் தாரணி திருநாள் எக்கால் வருமென ஏங்கித் துடிக்கும் எனையோ உறுபிணி என்றெலாம் ஏசுதி? மனம்நீ பிறழ்ந்து மயங்கினை கொல்லோ? குழலி அன்னை தந்தை அண்ணன் என்றெலாம் நின்னை யுளத்துள் நினைந்துளே னாதலின் உள்ளத் துள்ளது தெள்ளத் தெளிய விள்ளுவ துடையேன் வெறாஅ திதுகேள்: அன்னை தந்தை அற்றவ ளென்னை மன்னன் மைந்தன் மாபெரும் வழுதி மன்றல் கொள்ள மனத்துள் நினைந்துளன்: நின்னொடுஞ் சூழாது நேரிழை யானும் என்மனக் கதவம் இசைந்து திறந்தனென்;