பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம்பெருவழுதி கடம்பன் கடம்பன் குழலி கடம்பன் கடம்பன் (குழலியின் கண்ணிரைத் துடைத்து இதற்கோ சுற்றினை இத்துணை நேரம்? மதர்த்தெழும் இளங்கொடி வளர்மரந் தாவிப் பற்றுத லியல்பே பாவை நீயும் கற்றவள் பகுத்தறி வுற்றவளை நின்னைப் பெற்றவர் மானம் பேணிக் காப்பவள் என்னோடும் உற்றவள் இழையாய் பிழையே. சின்னவள் நின்னுளம் செய்யோன் அவனுளம் பின்னுதல் குறிப்பாற் பிழையா தறிவேன்; தென்னன் அவைக்களத் தீந்தமிழ்ப் புலவர் மன்னர்க் குரைக்க மாபெருந் தேவியும் நின்னைக் கொளற்கு நேர்ந்த செய்தியும் செம்புலச் சிறையார் செப்பக் கேட்டுளேன்: அம்பலப் புலவர், அரசர், அரசி இசைந்தன ராதலின் யானுந் தடாது . நசைந்துளம் மகிழ்ந்தனென்; நடுக்கந் தவிர்க நடந்தன தெரிந்துமோ நாடாள் மன்னற்கு நடலை புரிந்தனை? நகைதரும் நின்செயல் நடலையா? நானா? நாடாள் மன்னற்கா? உடன்பிறப் பாகி உயர்ந்தோய் ஆம்ஆம்: கூடார் தம்மொடுங் கூடிப் பாண்டி நாடாள் வேந்தர்க்கு நடலை புரிந்தனை: என்மொழி புகன்றனை இளையோய்? பிறரிப் புன்மொழி யுரைப்பிற் றம்முயிரிழப்பர்: பின்னவ ளாதலிற் பிழைத்தனை போபோ என்னோடு சீறி யென்பயன்? நாட்டின் மன்னர் இதனை மனத்துட் கொண்டே பின்னைப் போர்க்கு நின்னை உய்த்திலர்: அடாமொழி என்செவிப் படாமுனம் துடித்து விடாதுயிர் கொண்டுளேன் வீணன் ஆகினேன்; 275