பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 கவியரசர் முடியரசன் படைப்புகள்- 8 அம்மா இவ்வணம் அடாப்பழி கூற நின்வாய் துணிந்ததோ? நினைப்பினும் நடுங்கும்: குழலி என்வா யென்ன! இவ்வுல கனைத்தும் வஞ்சகர்க் காலில் வாய்திற வாவோ? கடம்பன் : தடந்தோள் மார்பு தாங்கிய புண்ணும் படர்ந்த நெற்றியிற் பட்டுள காயமும் கடம்பன் கடந்த கடும்போர் தந்த வெற்றிப் பரிசில் விழுப்புண் காண்நீ மற்றிவை கண்டும் வஞ்சகன் என்றோ சொற்றனை மடவை? சூழ்பகை நாப்பண் கொற்றவற் காக்க உற்றென் னுயிரும் பொருளாக் கருதாது பொருது மீட்டுளேன்: மருளால் அறிவு மயங்கினை போலும்; தாயக மண்ணுந் தாயும் ஒன்றே தாய்க்கோ தீமை தன்மகன் நினைவன்? குழலி சீற்றம் விடுக; தென்றிசைப் போரில் தோற்ற தெதனால்?... கடம்பன் ! ------ மாற்றலர் நம்படை மறைகள் பலவும் நிறையத் தெரிந்துளர்; குழலி : (இடை மறித்து) மறையம் அனைத்தும் மாற்றலர் அறிய நிறைய வுரைத்தோன் நீயே யன்றோ? வீரர் தலைவன் வெல்போர்க் கடம்பன் சேரற் கொற்றுரை சிறிய னாகினன் அவன்றன் உடன்பிறப் பாட்டியைக் கொள்ள எவர்மனம் இசையும்? இளம்பெரு வழுதி உடன்படும் என்னும் ஒண்ணுதற் றேவியும் தடந்தோள் மன்னரும் தடுப்ப ரன்றோ? உடன்பிறந் காட்கே உறுதுயர் தந்தனை