பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம்பெருவழுதி கடம்பன் குழலி கடம்பன் குழலி கடம்பன் குழலி கடம்பன் குழலி மட்படு மொழியாய் மூடுநின் வாயை கடம்பனோ மறையங் கழறுவன் சீசீ. என்வாய் மூடுவென் இவ்வூர் வாயை என்கொடு மூடுவை? இகல்நாட் டுள்ளோர் நம்மில் புக்கும் நயந்துரை யாடியும் தம்மில் போலத் தங்கியுஞ் செல்வோர் தம்முடன் தனித்துத் தனித்துரை யாடி மகிழ்ந்த தென்கொல்? மறையம் அன்றோ? (வாய் விட்டுச் சிரித்து) பேதாய் தனித்துப் பேசிய துண்மை நீதான் அதனை வேறா நினைந்தனை: நின்செவிப் படாது நின்றுரை யாடிய உண்மை யாதனைப் பிறழ வுணர்ந்தவை: பொய்யா மொழியன் என்றுனைப் போற்றி எய்யா மகிழ்வில் இருந்தேன் என்பாற் பொய்ம்மொழி துணிந்து புகல முயலுதி செய்வினை மறைக்கச் சிரித்துங் காட்டுதி: ஐயோ நின்மனத் தையம் அகலச் செய்வழி யறியாது திகைத்துளேன் அம்மே. பின்னவள் மறியாது பேசிய மொழிகள் சொன்னபின் ஐயம் தொடரா தன்றோ? பின்னவள் அறியாது பேசிய மொழிகள் என்னநீ மொழிந்தனை இஃதே சாலும், முன்னர் மொழிபழி முற்றும் மறப்பேன்: (குறுக்கிட்டு எனையே மாற்ற எண்ணித் திசைதிருப் பினையேல் தோல்வி பெறுவை நீயே அன்றவர் தம்முடன் தனித்துரை யாடிய மாற்றம் அனைத்தும் மாற்ற மின்றிச் சாற்றுக இன்றேல் தூற்றுமிவ் வுலகு: 277