பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 கடம்பன் : நின்னைக் குறித்து நிகழ்த்திய மொழியை மன்னர்க் கென்று மாறுற வுயர்ந்தனை பின்னற் குழலி பின்னிப் பின்னி என்னை ஐயுற் றிகழேல் இனியே: குழலி தையலெற் குறித்துத் தனித்துரை யாடினிர் மெய்யெனில் அதனை வெளிப்பட விளம்ப அஞ்சுவ தென்கொல்? . . கடம்பன் ! -------- அச்சமொன் றில்லை; வஞ்சி நின்னுழை வாய்விட் டுரைத்தல் ஒவ்வா தென்றே உனைமறைத் திருந்தேன்; குழலி பேசப் படுபொருள் பேதை யானெனிற் பேசிய கூறக் கூசுதல் எதற்கு? மாசிலை யெனிலவை மறைத்தல் ஏனோ? கடம்பன் ஏசுதல் ஒழிக. இனிமறை யில்லை பேசின. அனைத்தும் பிறழா துரைப்பென்: பன்னருஞ் சிறப்பிற் பாண்டியன் மைந்தனை நின்னுளத் திருத்தி நினைகுவை நாளும் மன்னன் மைந்தனுற் மனத்துணை விழைந்தனன்; இருவர் மனமும் ஒருமன மாதலை அரசரும் அரசியும் அறிந்துடம் பட்டனர் எனநம் அமைச்சர் இயம்பினர் என்பால் ஆதலிற் சேரர் அணுகிய செய்தி பேதை நின்பால் ஒத விழைந்திலேன் குழலி 1 பேதையென் றெள்ளிப் பேசிய மறையை ஒதுத லின்றி உறழ்ந்துறழ்ந் துரைத்த ஒன்றுடன் மற்றொன் றுறாமொழி பேசுதி: ஒன்றுபொய் மறைக்க ஒரா யிரம்பொய் பன்னுதல் வேண்டும். . கடம்பன் . ... ... பாவாய் உண்மை பன்னுமுன் ஏன்நீ பதறுதி? .