பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2E2 கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 செம்புலச் : நேரா வொன்று நேர்ந்த தன்றி போரான் ஈண்டுப் புதுமையும் நேர்ந்தது: ஆண்டுக் காண்மின். -- (விறல்வேள், கணியன் விலங்குடன் வர பாண்டியன் : . . ஆஆ. ஈதென்? பூண்ட விலங்கொடு புகுவோன் பின்னர்ப் பிணிப்புறு கையொடு கணிப்பர் வரலேன்? நாகனார் : கணிக்குங் கைகள் பிணிப்புறல் நன்றோ? அகற்றுக வேந்தே அகற்றுக இன்னே: கடம்பன் : புகற்கரும் போரிற் புதுமை காட்டும் விறல்வேள் கையும் விலங்கி அகலத் திறலோய் ஆணை தேர்ந்தருள் செய்க பாண்டியன் ஆம்ஆம் அவனோர் அரும்படைத் தலைவன்: நான்மா மறைதெரி நல்லோர் இவர்தாம் ஆமாறு செய்க அகற்றுக பிணிப்பு: (விலங்கு அவிழ்க்கப்பட்டபின்) விறல்வேள் : வணக்கம் வேந்தே ... . கலியன் ! --- “- வாழ்க மன்னா, பாண்டியன் : பிணக்குற் றெழுந்த பேணாப் பகைஞனை வணக்குற விலங்கிட் டழைத்து வந்தனிர் | குணக்குன் றிவர்க்கேன் கொடுமை யிழைத்தீர்? செம்புலச் : பொறுத்தருள் புரிக பூசுரர் இவர்தம் நரித்தனம் அனைத்தும் புலப்படும் காண்மின், (விறல்வேளை நோக்கி) தார்ப்படைத் தலைவ தண்டமிழ்ப் பாண்டியன் போர்ப்படை கொண்டு புகுதர நினைந்ததென்? விறல்வேள் : எமக்குரித் தாய எல்லைப் பகுதி நூமதெனக் கோடலின் நோனா தெழுந்தனம்;