உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

འཁོད། இளம்பெருவழுதி விறல்வேள் பாண்டியன் நாகனார் பாண்டியன் செம்புலச் தெளிவுற அனைத்துந் தெரிநதுளிர் சிறுகடு களவும் அறியார் போலெனை வினவுதிர்! உளவறிந் துரைக்க உடன்படா இவர்க்குக் கழனிசூழ் சிற்றுர் கணியர் பெயரால் வழங்குக எனயாம் வழங்கினம் அதனை: துளங்கிய மனத்தர் துவிந்து மொழிந்தனர்; நல்வழி காட்டும் நான்மறை யாளரோ அல்வழிப் புக்கனர் அடுக்குமோ இச்செயல்? மறைநவில் நாவோ மறையம் புகல்வது? முறைதெரி நெஞ்சுட் கறையோ படிவது? விண்வழி நமக்கு விளம்பும் இவரோ மண்விழைந் திழிசெயல் மனத்தாற் றுணிவது? நம்ப இயலா நயவஞ் சகச்செயல் நம்பியோ செய்தனர்? வெம்பும் எம்முளம்!

தமக்குள்)

கற்றவர் செயலோ காட்டிக் கொடுத்தல்? மற்றவர் செய்யின் மடிவ துறுதி: பொருந்தா இச்செயல் புரிந்தனம் அனைத்தும் அருந்திற லமைச்ச யாங்ங்னம் அறிந்தனை? தோலாக் கடம்பன் தோற்றனன் எனலும் நூலார் இவர்பால் நுண்ணிய ஐயம் என்னுள் எழலான் இவரறி யாவணம் மன்னிய ஒற்று வளைவுற அமைத்து வழுதி போர்க்கு நன்னாள் வகுக்க வழுவுடை யாரிவர் வாரா வண்ணம் தடையும் செய்து தக்காங் கிருந்தனென்; படைமறை யனைத்தும் பகர்ந்த பிழைக்குக் காவல இவர்க்குக் கைவிலங் கிடாது பூவது கொண்டு போற்றவோ? புகல்க: தென்னவர் அரசுக்குத் தீங்குசெய் தார்க்கு மன்னவர் ஒறுக்க மனங்கொளல் வேண்டும்: யாது செய்குவம்? . . 2.85