பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 == கவியரசர் முடியரசன் படைப்புகள்- 8 விறல்வேள் : . . ஒதுநல் லமைச்சே தீது செய்தோர்த் தெரிந்தும் கடம்பனைப் பழிசெய் தானெனப் பகர்ந்த தென்கொல்? செம்புலச் : அழிசெய லாளரை அறிகுவம் எனினும் பொன்வாட் கடம்பன் புரையிலன் என்பது நின்வாய் மொழியான் நிறுவுதல் வேண்டி நின்பால் வினவி நேர்மை யுணர்த்தினம்; மன்னர்க் குண்மை மறுவறத் தெரிந்தபின் என்செயக் கருதினும் அன்னது செய்க பாண்டியன் : கலங்கிய மனத்தேன் கழற வாயிலேன் புலங்கொள் நீரே பொருந்துவ செய்க: செம்புலச் : ஏழிரன் டாண்டுகள் இருஞ்சிறைக் கொட்டில் வாழும் ஆணை வழங்குக இவர்க்கே - கணியன் : என்னடி தொழுதனை இந்நாள் வரைஇனி நின்னடி தொழுதேன் என்பிழை பொறுக்க: திருவுளக் குறிப்பிற் சிறைதான் முடிவெனின் மறுமொழி புகலேன் மகிழ்வுடன் புகுவேன். நாகனார் : வேந்தே ஒரு மொழி விளம்புவென் கேண்மதி ஈர்ந்தண் வேம்பு கைக்கும் எனினும் உடற்பிணி யகற்றி உறுதி நல்கும். s தொடுத்த வேம்பின் தொடையல் உடையாய் நீயும் நன்றே நிகழ்த்துதல் வேண்டும் காயும் மனத்தைக் கடிதின் விடுக; நல்லர் பண்பர் நடுவர் என்போர் பொல்லா ராகும் பொழுதும் உண்டு: பேரவாப் பேயின் பேழ்வாய்ப் பட்டோர் நேரவாம் மனத்தின் நீப்பர் வேர்ப்பர்