பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாகனார் கடம்பன் நா கனார் குழலி கடம்பன் காட்சி 19 H H H H H H H H H H எதிர்வருங் காழகன் எழுசமர் முருக்கிப் புதுமண மாலை புனைகென வழுதி கதிரெழு பொழுதிற் கடம்பன் மனையில் முதிர்புல நாகர்க்கு மொழிந்தான் விடையே. வெல்வோர் இலாத வெல்போர்க் கடம்ப, அல்லல் தருமோர்த் தொல்லை யொழிந்தது நல்லன் இங்கினி நடைபெறல் வேண்டும்: இளம்பெரு வழுதியின் உளங்கொள் குழலியின் நலங்கொள் வதுவை, நடைபெறல் வேண்டும்; தங்கை மனத்துள் தங்கியோன் யாவன் அங்கவன் தோளுக் கவள்மலர் சூட்டும்; குழலி நின்னுளக் குறிப்பு மொழிமதி: வழுதி மனங்கொள விழைதி கொல்லோ? (நாணி நின்று) பின்னவள் எனக்கெனப் பிறிதோ ருளமோ? அண்ணன் உளமே என்னுள மாகும்: கூடலர் தம்மொடுங் கூடிப் பாண்டி நாடாள் வேந்தர்க்கு நடலை புரிந்தேன்; தீய விழையுந் தீயேன் உளந்தான் மேய இவள்தன் மெல்லுள மாமோ?