பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 குழலி சின்னவள் அறியாது செப்பிய புன்மொழி நின்னகங் கொளாஅ தென்பிழை பொறுத்தருள் அண்ணா நின்னை அடாப்பழி கூறிப் பெண்மதி யாலுனைப் பெரிதும் இகழ்ந்தேன் (காலில் வீழ்ந்து வணங்க) கடம்பன் : நாட்டுப் பற்றால் நவின்ற நின்மொழி கேட்டு நெஞ்சம் கிளர்ந்தெழ லன்றி வருந்திலேன் கண்ணே வாழ்க நின்னுளம் வருந்தேல் அன்னாய் வழிபுனல் இனிஏன்? நாகனார் : ஆண்மதி பெண்மதி ஆயிரு மதியும் காண்மதி ஐயம் கதுவுத லியல்பே. தோள்வலிக் கடம்ப துயநின் ணுணர்வைச் சூழ்நிலை ஐயுறத் தூண்டிற் னறய ஐயம் எனையும் ஆட்டிய படைத்தது. கடம்பன் : ஐயந் திரிபற ஆய்ந்துயர் புலவீர் ஐயந் தெளிந்ததே அஃதே சாலும்; நல்லா ருளமெலாம் நடுவிற் பிறழவும் அல்லது நினையவும் அமைந்ததே என்செயல் கடம்பன் சூழ்நிலை உண்மையைச் சூழ்ந்து மறைக்கும் ஆழ்மதி யுடையரும் அதற்கடிமை யாவர்; ஐயம் எழினும் மெய்யை மறைக்கும் பொய்யை நம்பிப் புலம்ப வைக்கும்; வழுதி (எதிர்பாராவகையில் உள்ளே வருகிறான்) அனைவரும் வருக ஐய வருக வருக நாகனார் : சிலம்படி ஒன்றோ வலங்கொள் கழலும் புலம்புத லுண்டு.அப் பொய்யை நம்பி; குழவியின் வதுவை குறித்துரை யாடினேம் பொழுதுணர்ந் தீங்குப் புகுந்துளை நீயும். வழுதி : மலைக்கோன் றனக்கு மகட்கொடை நல்கச் சிலைக்கோன் கடம்பன் செப்பினர் போலும்